விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றில் மரியா சக்கரி ஏஞ்சலிக் கெர்பர் தோல்வி

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்துவருகிறது. இதில்  ஆடவர் ஒற்றையர் 3வதுசுற்றில் நம்பர் ஒன் வீரரான  செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலியின் ஜன்னிக் சின்னர், இங்கிலாந்தின் கேமரூன் நோரி, ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மகளிர் ஒற்றையரில் 3வது சுற்றில், கிரீசின் மரியா சக்கரி, 3-5, 5-7 என்ற செட் கணக்கில், ஜெர்மனியின் தட்ஜானா மரியாவிடம் தோல்விஅடைந்தார். பிரான்சின் கரோலின் கார்சியா, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜாங் ஷூவாயை வீழ்த்தினார். ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், 4-6, 5-7 என பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். இங்கிலாந்தின் ஹீதர்வாட்சன், 7-6,6-2 என ஸ்லோவேனியாவின் காஜாஜூவனையும், துனிசியாவுன் ஓன்ஸ் ஜாபீர், 6-2,6-3 என பிரான்சின் டயான் பாரியையும் வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தனர்.

Related Stories: