தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது: டிஜிபி சைலேந்திர பாபு மதுரையில் பேச்சு

மதுரை: தமிழக காவல் நிலையங்களில் கைதி மரணங்களை தடுப்பது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாவட்டம் தோறும் விழிப்புணர்வை கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில் போலீஸ் நிலைய மரணம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று காலை நடந்தது. இதில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:- இதையும் படியுங்கள்: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள், காவல் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 84 மரணங்கள் அரங்கேறி உள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் 18 காவல் நிலைய மரணங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. இது தொடர்பாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 12 வழக்குகளில் மட்டுமே போலீசாரின் தவறு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தமிழகத்தில் இனி ஒருவர் கூட காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது உயிர் இழக்கக்கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். திருச்சியில் லாக்கப் டெத் விழிப்புணர்வு கருத்தரங்கு, கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் காவல் நிலைய மரணம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம், மதுரையில் நடந்து வருகிறது என்றார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: