×

வால்பாறையில் தொடர் மழையால் மண்சரிவு : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வால்பாறை :   வால்பாறை பகுதியில்  தொடரும் மழையால் சாலையோரம் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தொடர் மழையால் நடுமலை சாலை, பொள்ளாச்சி சாலை மற்றும் எஸ்டேட்களுக்கு செல்லும்  சாலை ஓரங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதை  தடுக்காவிட்டால் தொடர் மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வால்பாறை  பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் பருவ மழை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே மண் பிடிப்பு தன்மை இழந்து விட்ட  நிலையில் சாலையோரங்களில் உள்ள சிறிய மண் சரிவுகளையும், நீர் தேங்கி உள்ள  பகுதிகளையும் அதிகாரிகள் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


Tags : Valparai , Valparai, sandslide, Precautionary measure,
× RELATED கோவை மாவட்டம் வால்பாறை அருகே...