×

இளையான்குடி பகுதியில் விளைச்சல் இருந்தும் விலையில்லை பருத்தி விவசாயிகள் கவலை

இளையான்குடி : இளையான்குடி பகுதியில் நடப்பாண்டில் சுமார் 7ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் அறுவடை செய்த பருத்தி மே மாதத்தில் கிலோ ரூ.105 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஜூன் மாதத்தில் படிப்படியாக விலை குறைந்து, தற்போது நிலவரப்படி ஒரு கிலோ பருத்தி ரூ.63க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

பருத்திக்கு ஏற்ற வெயில் நிலவுவதால் காய்கள் வெடித்து அறுவடை செய்யும் நேரத்தில், விலை குறைந்தது பருத்தி விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மழை மற்றும் பூச்சி தாக்குதலால் பருத்தியின் தரத்திற்கேற்ப மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது என பருத்தி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


Tags : Ilayayankudi , Ilayankudi,Cotton, farmer sad
× RELATED குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்