துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு நேற்று பிறந்தநாள். அவர், தமிழகத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ளார். தற்போது, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு வெங்கய்யா நாயுடுவை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி சிவா எம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

வெங்கய்யா நாயுடு பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘குடியரசு துணைத்தலைவர்  வெங்கய்யா நாயுடுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் பல ஆண்டுகள் நம்  நாட்டுக்காக தாங்கள் தொண்டாற்ற வேண்டும் என்று விழைகிறேன். நேர்மையும்,  ஆழ்ந்த அறிவும், எத்தகைய சூழலிலும் சிறிது நகைச்சுவை நயமும் நிறைந்த  தங்களது புகழ்மிக்க வாழ்க்கையானது பொதுவாழ்வில் இருக்கும் எங்கள்  அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: