ஓய்வு பெறும் நாளில் மருத்துவக்கல்லூரி முதல்வர் வேளாண் அதிகாரி சஸ்பெண்ட்

சென்னை: கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் மசோகன் நேற்றுமுன்தினம் ஓய்வு பெறுவதாக இருந்தார். ஆனால், 2020ல் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் அசோகன் முதல்வராக இருந்த போது, மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு தொடர்பான புகார் மீதான விசாரணை நிலுவையில் இருப்பதால், ஓய்வு பெறும் நாளில்  டாக்டர் அசோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதே போல், வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித்(60) ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆற்காடு ஒன்றியத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியபோது, லஞ்சம் வாங்கியது தொடர்பாக விஜிலென்ஸ்  போலீஸ் வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories: