பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களை போற்றிடுவோம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களை போற்றிடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராயின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர்கள் தினம். பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களை போற்றிடுவோம்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: