தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த அதிகாரி ராஜன் நியமனம்

சென்னை: ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக ஐபிஎஸ் அதிகாரியும், உளவுத்துறையின் சிறப்பு இயக்குனருமான ஏ.எஸ்.ராஜன் என்ற சேர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஏ.எஸ்.ராஜன். இவர், பீகார் கேடர் ஐபிஎஸ் அதிகாரியாவார். இருபது ஆண்டுகள் மத்திய உளவு பிரிவில் பணியாற்றினார். பீகாரில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ராஜன் 1999ல் உளவுப்பிரிவில் சேர்ந்தார்.

மத்திய உளவுத்துறையில் டெல்லி, தமிழ்நாடு, குஜராத், லடாக் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற இடங்களில் பணியாற்றினார். லண்டனில் உள்ள இந்திய தூதகரத்தில் மூன்றாண்டு காலம் பணியாற்றியுள்ளார். தற்போது ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ளார்.

Related Stories: