ராஜபாளையம் தொகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி மேலூர் துரைச்சாமியாபுரம் மற்றும் சொக்கநாதன்புத்தூர்  ஊராட்சி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கை ஏற்று  மேலூர் துரைசாமியாபுரம் ஊராட்சி களத்தில் புதிதாக நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்:

விருதுநகர் மாவட்டத்தில் 10 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் ராஜபாளையம் தொகுதியில் மட்டும் 7 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இதனை ஏற்படுத்தி தந்த தமிழக முதல்வர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு  நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  

விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக தமிழக முதல்வர் பணியாற்றி வருகிறார். மேலும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு தயாராக உள்ளது’ என்றார். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளை செயலாளர்கள், வேளாண் அலுவலர், விவசாயிகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: