ஓய்வு பெறும் நாளில் அரசு மருத்துவக்கல்லூரி; முதல்வர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் அசோகன். இவர் நேற்றுடன் பணி நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையை அவர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஓய்வு பெறும் நாளில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  கடந்த 2020ம் ஆண்டு கோவை அரசு மருத்துவ கல்லூரியில் அசோகன் முதல்வராக இருந்தபோது மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்ட எழுந்த நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால் அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories: