வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இறந்த ஊழியர்களுக்கு நினைவு தூண்‌

குன்னூர்:குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முதல்முறையாக பணியில் உயிரிழந்த ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில், கடந்த 74 ஆண்டுகளாக ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய ஆயுதப்படைகளின் முதன்மையான முப்படைகள் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.  உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கல்லூரியில் அமெரிக்கா, கென்யா, பிரிட்டன், பாகிஸ்தான், இலங்கை உட்பட பல வெளிநாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர்.  

இந்த கல்லூரி நுழைவு வாயிலில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போர் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது, ராணுவ பயிற்சி கல்லூரியில் பணியின்போது உயிரிழந்த ஊழியர்கள் நினைவாக புதிதாக நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.  இனி வரும் காலங்களில் பணியில் உயிரிழந்த ஊழியர்களின் நினைவாக இங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

Related Stories: