ரூ. 1.17 கோடியில் மழைநீர் கால்வாய் பணி; அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ துவக்கினார்

ஆலந்தூர்: பெருங்குடி மண்டலம், 186-வது வார்டுக்கு உட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் நேற்று ₹1.17 கோடி மதிப்பில் 4 வார்டுகளில் ஒருங்கிணைந்த மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ பங்கேற்று துவக்கிவைத்தார்.

சென்னை மாநகராட்சி, பெருங்குடி 14வது மண்டலம், 186-வது வார்டுக்கு உட்பட்ட புழுதிவாக்கம், சாரதி நகரில், நேற்று மாலை ரூ. 1.17 கோடி மதிப்பில் 185, 186, 187, 188 ஆகிய 4 வார்டுகளில் ஒருங்கிணைந்த மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெருங்குடி மண்டல குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், செயற்பொறியாளர்கள் முரளி, புருஷோத்தமன், கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பங்கேற்று, மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை துவக்கிவைத்தார். பின்னர், இப்பணிகளை மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினார்.

இதில் கவுன்சிலர்கள் ஷர்மிளா திவாகர், ஷெர்லி ஜெய், உதவி செயற்பொறியாளர் மோகனவடிவேலு, ஒப்பந்ததாரர் சுபாஷ், திமுக நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் குமாரசாமி, பால.கமலநாதன், கவுன்சிலர் ஜெ.கே.பர்மன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: