×

குஜிலியம்பாறையில் தேவாலய திருவிழா தேர்பவனி

குஜிலியம்பாறை:குஜிலியம்பாறையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ராயப்பர், சின்னப்பர் திருவிழா கொண்டாடப்பட்டது. குஜிலியம்பாறை, பாளையம், ராமகிரி, கோவிலூர், டி.கூடலூர் ஆகிய ஊர்களில் இருந்து  கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தேவாலயத்தில் உள்ள ராயப்பர், சின்னப்பர் தெய்வங்களை வணங்கி சென்றனர். முன்னதாக ஆடம்பர கொடியேற்றமும், பின்னர் திருவிழா திருப்பலியும், பொன்விழா நினைவாக சமபந்தி விருந்தும் நடந்தது.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் வழிபாட்டிற்காக நேற்று முன்தினம் இரவு ராயப்பர், சின்னப்பர் புனிதர்களின் ஆடம்பர சப்பரம் தேர்பவனி பஸ் ஸ்டாண்டு சாலை, கடைவீதி, காமராஜர் சிலை சாலை வழியாக வீதி உலா சென்றது. அப்போது புனிதர்களுக்கு சம்மனசு மாலை அணிவித்தல் நடந்தது. பின்னர் மீண்டும் கிறிஸ்துவ தேவாலயம் சென்றடைந்தது. இதையடுத்து திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் பங்குதந்தை, கன்னியாஸ்திரிகள், ஊர்பெரியதனம், பங்கு மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags : festival ,Therpavani ,Kujiliamparai , Church Festival at Kujiliampara
× RELATED குஜிலியம்பாறை அருகே தெருநாய்கள் கடித்து 9 செம்மறி ஆடுகள் பலி