சேலம் காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி: ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20-க்கு விற்பனையால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சேலம்: சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்திருப்பதால், அதன் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் மீண்டும் வழக்கம் போல உற்பத்தி தொடங்கி இருப்பதால் தக்காளியின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் 2 டன்  மட்டுமே வந்துகொண்டிருந்த சேலம் காய்கறி சந்தையில் தற்போது 20 டன் தக்காளி வரை விற்பனைக்கு வருகிறது. இதனால் தக்காளியின் விலை சரிந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை குறைந்திருப்பதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

வரத்து அதிகரித்திருப்பதால் தக்காளி விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தக்காளி வரத்து அதிகரித்து இதேநிலை நீடித்தால் போக்குவரத்து கட்டணம், சுங்கக்கட்டணம், ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி என உற்பத்தி செய்த விலை கூட கிடைக்காது என்பது விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது. எனவே இழப்பை தவிர்க்க அரசே தக்காளிக்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்றும், விளைச்சல் அதிகமுள்ள பகுதிகளில் தக்காளி ஜாம் தயாரிக்கும் ஆலை அமைத்துத் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: