பெரியபாளையம் பவானியம்மனுக்கு காணிக்கையாக வந்த 130 கிலோ பொன் நகைளை அமைச்சர் சேகர்பாபு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்

சென்னை: பவானியம்மன் கோயிலில் 130 கிலோ 150 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலவகையான பொன் நகைகளை ஸ்டேட் வங்கி மேலாளரிடம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார். திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையம் பவானியம்மன் கோயில் 130 கிலோ 150 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை முன்னாள் நீதிபதி ராஜு முன்னிலையில் ஸ்டேட் வங்கி மேலாளரிடம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், எம்எல்ஏக்கள் கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானியம்மன் கோயிலுக்கு பக்தர்களால் உண்டியலில் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட 130 கிலோ 150 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கோயிலுக்கு மாதத்திற்கு ரூ.2 லட்சம் வட்டித் தொகையாக வருகிறது. இந்த நகை பிரிகின்ற பணிக்கு மூன்று மண்டலங்களாக பிரித்து ஒரு மண்டலத்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜு, ஓய்வுபெற்ற நீதிபதி மாலா, இன்னொரு மண்டலத்திற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர ரவிச்சந்திரபாபு நியமிக்கப்பட்டனர். 18 மாதங்களுக்குள் தங்கத்தேர் பவனியை இக்கோயில் காணும்.

Related Stories: