ஜி-7 நாட்டு தலைவர்கள் துணியின்றி இருந்தால் பார்க்கவே சகிக்காது; புடின் பதிலடி

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புடின் போர் தொடுத்து இருப்பதால், மேற்கு நாடுகளின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார். இந்நிலையில், ஜெர்மனியில் சில தினங்களுக்கு முன் நடந்த ஜி-7 மாநாட்டில்  அமெரிக்க அதிபர் பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிருடேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேல் சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் குதிரையில் செல்லும் வீடியோ காட்சியை பார்த்து, இந்த தலைவர்கள் கிண்டலடித்தனர். ‘புடின் சட்டையின்றி இருப்பது, குதிரை உடம்பு போல் இருக்கிறது,’ என்று டிருடேவும், ‘நாமும் சட்டையை கழற்றி, புடினை விட பலசாலிகள் என்பதை காட்டுவோமா?’ என்று போரிஸ் ஜான்சனும் கூறினர்.  

புடினிடம் நேற்று இது பற்றி கேட்டதற்கு, ‘மேற்கு நாட்டு தலைவர்கள் உடற்பயிற்சியே செய்வது கிடையாது. நன்றாக சரக்கு அடிப்பார்கள். இடுப்புக்கு கீழோ, மேலோ... துணியின்றி இருக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. அவர்களை இந்த கோலத்தில் எப்படி பார்த்தாலும் சகிக்காது; அருவருப்பாக இருக்கும்,’ என்று சிரித்தபடி பதிலடி கொடுத்தார்.

Related Stories: