ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. பொறுப்பு தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். வட்ட கிளை தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் ஆனந்தன், துணை தலைவர் உத்தமராஜா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் கே.கங்காதரன், மாநில செயலாளர் திருவேங்கடம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் வின்சென்ட் ராஜ், ஜெயராம் போத்தி, ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் தரணி, மாநில பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்க மாவட்ட தலைவர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

கூட்டத்தில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.70ல் இருந்து தற்போது, ரூ.150 பிடித்தம் செய்வதை தவிர்க்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், புகழேந்தி நன்றி கூறினார். இதையடுத்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக திருவேங்கடம், செயலாளர்களாக முத்துலிங்கம், சவுதாமணி, சத்தியசீலன், மாவட்ட துணை தலைவர்களாக உத்தமராஜ், தணிகாசலம், அண்ணாமலை, மாவட்ட இணை செயலாளர்களாக ஆனந்தன், புகழேந்தி, அண்ணாமலை, எஸ்.ஆனந்தன், மாநில செயற்குழு உறுப்பினர்களாக பிச்சலிங்கம், ஜெயராம், போத்தி, ரவிக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், மாவட்ட செயலாளர் பிச்சை முத்து, மாவட்ட பொருளாளர் தணிகாசலம், வட்ட செயலாளர் திருவேங்கடம், வட்ட பொருளாளர் தணிகாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: