வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் முதல் நிலை பொறுப்பாளர்களுக்கான பேரிடர் மீட்பு பயிற்சி நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல் நிலை பொறுப்பாளர்களுக்கான பேரிடர் மீட்பு பயிற்சி நடந்தது. இதில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவின்பேரில் திருக்கழுக்குன்றத்தில் உள்ள அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன் தலைமை தாங்கினார். பொது இடங்களிலோ, தங்களது வீடுகளிலோ திடீரென தீப்பற்றினால் அதை எவ்வாறு, அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் செய்முறை ஒத்திகை மூலம் விளக்கமளித்தனர். இதில் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திலுள்ள வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தன்னார்வலர்கள் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: