எல்ஐசிக்கு ரூ.4,27,419 கோடி வருவாய்

மும்பை: புதிய பிரிமீயம் மூலம் எல்ஐசிக்கு  ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 419 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆயுள் காப்பீட்டு கழகத்தின்(எல்ஐசி) மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதில், எல்ஐசி நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டில் புதிய பிரிமீயம் திட்ட வருவாய் 6.1 சதவீதம் உயர்ந்து ரூ.4,27,419 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டுடன்(மார்ச் 31, 2021) முடிவடைந்த காலக்கட்டத்தில் இது ரூ.4,02,844 கோடி ஆக இருந்தது. மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில்(2022) வரிகளுக்கு பிந்தைய லாபம் ரூ.4043.12 கோடி. இது முந்தைய ஆண்டு(2021) ரூ.2900.57 கோடி ஆக இருந்தது. இதில் 39.39 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 

Related Stories: