அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து பஞ்சாப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

சண்டிகர்: அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் பக்வத் மான் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதன் மீதான விவாத்தில் பேசிய முதல்வர் பக்வத் மான், ‘‘அக்னிபாதை திட்டம் குறித்து விரைவில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேச உள்ளேன். இது நாட்டின் இளைஞர்களுக்கு எதிரான திட்டமாகும்,” என்றார். இந்த தீர்மானத்துக்கு பாஜ எம்எல்ஏ.க்கள் அஸ்வினி சர்மா, ஜான்கி லால் மகாஜன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் எம்எல்ஏ பிரதாப் சிங் பஜ்வா, அக்னிபாதை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து, அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: