பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை வந்த கருவாட்டு வியாபாரியிடம் 78 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை: பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை வந்த கருவாட்டு வியாபாரியிடம் 78 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தெற்கு கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 53 வயதானவர் பால முரளி. இவர் இன்று பிற்பகல் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அடைந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமான அவரிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரது உடைமைகளை சோதனை செய்த போது, கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக் கண்டனர்.

இதை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கருவாடு விற்பனை செய்ததில் வந்த பணம் என தெரிவித்திருந்த நிலையில்,  எந்தவித ஆவணமும் இன்றி ரயிலில் கொண்டுவரப்பட்ட ஹவாலா பணம் 78 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த ஆர்பிஎஃப் போலீசார், அதனை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: