பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்க கோரி; சென்னை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தர்ணா

தண்டையார்பேட்டை: பிரிந்து சென்ற கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி  சென்னை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பெரம்பூரை சேர்ந்தவர் தேவி (31). இவரது கணவர் டேனியல். இவர்களுக்கு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தையும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. தற்போது தேவி கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக டேனியல் மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து கடந்த மார்ச் மாதம் திருவிக நகர் காவல்நிலையத்தில் தேவி புகார் அளித்தார். அதில்,  கருத்து வேறுபாடு காரணமாக கணவர் டேனியல் பிரிந்து சென்றுவிட்டார். அவரை என்னுடன் சேர்த்து வைக்கவேண்டும்” என குறிப்பிட் டுள்ளார். அதன்படி டேனியல் செல்போனில் தொடர்புகொண்டு காவல்நிலையம் வரவழைத்து, இருவரும் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறினர். ஆனால் டேனியல், தேவியுடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பமில்லை என கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரிந்து சென்ற கணவரை தன்னுடன் மீண்டும் சேர்த்து வைக்கும்படி தேவி நேற்று மாலை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தனது குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து கலெக்டர் அமிர்தஜோதி மற்றும் அதிகாரிகள், தர்ணாவில் ஈடுபட்ட தேவியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Related Stories: