×

டாஸ்மாக் போல் வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் போல வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அன்னிய மரங்களால் வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனங்களை காக்கும் விவகாரங்களில் அறிக்கை செய்வது தவிர வேறு என்ன செய்துள்ளீர்கள்? என்றும் நீதிபதிகள் வினவினர்.

Tags : Tasmag ,Tamil Nadu government , Tasmac, Revenue, Forestry, Concern, iCord
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்