×

திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா துவங்கியது

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள  பெரியாழ்வார் சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பெரியாழ்வார் சுவாதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி சுவாதி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக பெரியாழ்வார் சன்னதியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் கொடி பட்டத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்தில் கொடியை ஆண்டாள் கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் ஏற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்ற ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினந்ேதாறும், பெரியாழ்வார் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளிப்பதுடன், வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது



Tags : Periyalwar ani swathi festival ,Thiruvilliputtur , Periyalwar Ani Swathi festival started in Thiruvilliputhur
× RELATED திருவில்லிபுத்தூரில் நள்ளிரவில்...