தா.பழூர் அருகே கோவிந்தபுத்தூர் செட்டேரியில் செத்து மிதக்கும் மீன்கள்: ஆய்வு செய்ய கோரிக்கை

தா.பழூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கோவிந்தபுத்தூர் கிராமத்தில் கீழதெருவில் உள்ளது. செட்டேரி ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த செட்டேரி ஊராட்சி நிர்வாகம் சார்பில் உள்ளது இந்த ஏரி. தற்போது சுமார் அரை கிலோ மதிப்பிலான மீன்கள் அதிக அளவில் இறந்த நிலையில் மிதந்து வருகின்றன.

என்ன காரணம் என தெரியாத நிலையில் மீன்கள் இறந்து மிதக்கின்றது. எனவே இறந்த மீன்களை அகற்றி மேலும் உள்ள மீன்கள் இறக்காமல் இருக்கவும், அருகில் வீடுகள் இருப்பதால் துர்நாற்றம் ஏற்படும் முன்பு இறந்த மீன்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் இறப்பிற்கு என்ன காரணம் என ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: