ஊட்டி - கோத்தகிரி சாலை கோடப்பமந்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி - கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து பகுதியில் ரூ.1.45 கோடி செலவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான சாலைகள் செங்குத்தான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சாலையோரங்களில் கட்டாயம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், இது போன்று தடுப்பு சுவர் அமைக்கப்படாத இடங்களில் மழைக்காலங்களில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் கோடப்பமந்து பகுதியில் மழைக்காலங்களில் விபத்து ஏற்படும் அபாயம் நீடித்த பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.45 கோடி செலவில் தற்போது தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கோடப்பமந்து பகுதியில் இரு இடங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தடுப்பு சுவர் அமைப்பதன் மூலம் வரும் காலங்களில் மழை பெய்யும் சமயங்களில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கம் முடியும். அதேசமயம், சாலையோரத்தில் உள்ள குடியிருப்புகளையும் பாதுகாக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போன்று, ஊட்டி - கோத்தகிரி சாலையில் மைனலா பகுதியிலும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Related Stories: