×

ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.06.2022) இராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவிற்கு செல்லும் வழியில் காரைக்கூட்ரோட்டில், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.  மேலும், அவ்வில்லத்தில் உள்ள மாணவர்களிடம் பாடம் நடத்தும் முறை குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.

ஆசிரியர்களிடம் அம்மாணவர்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அந்த இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆய்வின்போது, பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் மீது விளக்கம்கோரி  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது, மாண்புமிகு  நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags : Chief Minister ,MK Stalin ,Government ,Children's Home for Children ,Ranipettai , Ranipettai, Boys, Children, Chief, MK Stalin
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...