சொத்துக்காக தொழிலதிபரை கடத்திய வழக்கு போலீஸ் உதவி கமிஷனருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருமங்கலத்தில் தொழிலதிபரை கடத்திய வழக்கில் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி உதவி ஆணையர் சிவகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. உதவி ஆணையர் சிவகுமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினார். , எழும்பூர் நீதிமன்றத்தில் முன்அனுமதி பெறாமல் தமிழகத்தை விட்டு சிவகுமார் வெளியேறக்கூடாது, விசாரணைக்கு தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். சாட்சிகளையும் ஆதாரங்களையும் கலைக்கக் கூடாது. ஒரு வாரத்தில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து, ஒரு லட்சம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதத்தை தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

Related Stories: