பாலிவுட்டில் அறிமுகமாகிறார் அர்ஜூன் தாஸ்

சென்னை: தமிழில் ‘கைதி’, ‘அந்தகாரம்’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர், அர்ஜூன் தாஸ். தற்போது ‘அநீதி’, ‘துருவ நட்சத்திரம்’, ‘கும்கி 2’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அர்ஜூன் தாஸ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் உருவாகியிருந்த ‘அங்கமாலி டைரீஸ்’ என்ற படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை ‘வல்லமை தாராயோ’, ‘கொலகொலயா முந்திரிக்கா’, ‘மூணே மூணு வார்த்தை’, ‘கேடி என்கிற கருப்புதுரை’ ஆகிய படங்களின் இயக்குனர் மதுமிதா இயக்குகிறார். ‘அங்கமாலி டைரீஸ்’ இந்தி ரீமேக் படம் கோவா பின்னணியில் உருவாக்கப்படுகிறது.

Related Stories: