பில்கேட்சை சந்தித்த மகேஷ் பாபு

ஐதராபாத்: தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ‘சர்காரு வாரிபாட்டா’ என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தனது ஒவ்வொரு படமும் வெளியான பிறகு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், மனைவி நம்ரதா ஷிரோத்கர் மற்றும் மகன், மகளுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் அவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சை நேரில் சந்தித்தார். பிறகு அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ள மகேஷ் பாபு, ‘பில்கேட்சை சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகம் கண்ட மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வையாளர்களில் அவரும் ஒருவர். மிகவும் பணிவானவர், உத்வேகம் மிகுந்தவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: