பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடலோர காவல் படையினர் நடத்திய சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

மாமல்லபரம்:  தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவுவதை தடுக்க மாமல்லபுரம் கடற்கரையில் கடலோர காவல் படை போலீசார் சாகர் கவாச் ஒத்திகை நடத்தினர். மாமல்லபுரம் மீனவர் குப்பத்தில் நேற்று கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் 2 நாள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. கடலில், இருந்து கரைக்கு வந்த அனைத்து படகுகளையும் போலீசார் தீவிர சோதனை செய்தனர். இந்த, ஒத்திகையில் தீவிரவாதிகள் போர்வையில், சென்னையில் இருந்து கடல் மார்க்கமாக ராட்சத படகில் மாமல்லபுரம் நோக்கி வந்த கடலோர காவல் படை காவலர்கள் 3 பேரை, புதிய கல்பாக்கம் பகுதியில் மடக்கி பிடித்து கோவளம் கடலோர காவல் படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த, பாதுகாப்பு ஒத்திகை காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. தீவிரவாதிகள், போர்வையில் பிடிபட்ட 3 கடலோர காவல் படை போலீசாரிடமும் சோதனை நடத்தி ஒத்திகை காட்டப்பட்டது. இதில் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் எந்த ஆயுதங்களும் இல்லை என தெரிந்த பிறகு,  உயரதிகாரிகளின் உத்தரவுப்படி மாலை விடுக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: