கே.கே.நகரில் பைக் மீது கார் மோதி விபத்து போதையில் வாகனம் ஓட்டிய நட்சத்திர ஓட்டல் மேலாளர் கைது

சென்னை: நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் பிரபு(37). இவர் நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து அவர் தனது அறைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் கே.கே.நகர் பகுதியில் செல்லும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓடியது. அப்போது முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் கிஷோர் குமார் (24) மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் கார் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயடடைந்த கிஷோர் குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய பிரபுவை மீட்டு விசாரணை நடத்திய போது, அவர், அதிகளவில மது போதையில் இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மது போதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய பிரபு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய காரை கிரேன் உதவியுன் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: