×

மேட்டுப்பாளையம் பகுதியில் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பெரியபாளையம்: எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராம பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பழைய குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டி பழுதடைந்து தொட்டியின் தூண்கள் விரிசல் ஏற்பட்டு அதில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்து விளைவிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. தற்போது நீர் தொட்டியில் இருந்து தான் கிராமத்திற்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த குடிநீர் தொட்டி அருகே 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டி கடந்த 2020-21ம் நிதியாண்டில் ரூ22 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு குழாய் இணைப்பு பணிகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளது. பழைய குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டி எந்த நேரத்திலும் சரிந்து கீழே விழுந்தால் பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே பழைய தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டியில் பணிகளை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Mettupalayam , New drinking water overhead tank to be brought into use in Mettupalayam area: Public demand
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது