×

சண்டிகர்கள் நடைபெற்ற 2 நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவு: பல்வேறு பொருட்களின் மீதான வரி உயர்வு; மருத்துவ உபகரணங்கள் மீதான வரி குறைப்பு

சண்டிகர்: ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டத்துக்கு 28 சதவீதம் வரி விதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். 2 நாட்கள் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தின் முடிவுகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர்:
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை. கூடுதல் வரி விதிப்பது பற்றி மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்க குழுவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். மாநிலங்களுக்கான இழப்பீட்டை நீட்டிப்பது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படவில்லை. சரக்கு போக்குவரத்துக்கான வரியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது என தெரிவித்தார்.

ஜிஎஸ்டி கவுன்சில் முன் பல்வேறு மாநிலங்கள் வரியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதற்க்கு பல குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுக்கள் மூலமாக பரிசீலை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்

* எழுதும் மை மீதான வரி 12 %-ல் இருந்து 18 %-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* தண்ணீர் இறைக்க பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகள் மீதான வரி 12%-ல் இருந்து 18%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* இட்லிக்கான மாவு அறைக்கு இயந்திரத்திற்கான வரி 5%-ல் இருந்து 18 %-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
* அரிசி அரவை மில்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு இயந்திரங்களுக்கான வரி 5% இருந்து 18 %-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
*எல்.ஈ.டி. பல்புகள் மீதான வரி 12% -ல் இருந்து 18 %-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
*சூரிய ஒளி மூலமாக தண்ணீரை சுடவைக்க கூடிய இயந்திரத்திற்கான வரி 5% இருந்து 12%-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
* சில தோல் பொருட்களுக்கான வரி 5%-ல் இருந்து 18 %-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
* வைரங்கள் மீதான வரி 0.25%-ல் இருந்து 1.5 %-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில்லால் அமைக்கப்பட்ட அந்த குழுக்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையிலே இந்த வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மருத்துவ உபகாரங்களுக்காகன வரியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்த குழு வலியுறுத்திருந்தது. அதன் அடிப்படையில், மருத்துவ உபகாரங்களுக்கான வரி 12 %-ல் இருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவத்துறைக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : GST Council ,Chandikars , Chandigarh, GST Council meeting, tax hike, tax cut on medical equipment
× RELATED ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு;...