×

சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்த கருத்துக்கு இந்தியா கண்டனம்

டெல்லி: குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்த கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையம் கருத்துக்கு இந்திய நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடுவதாக என  வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கை தொடுப்பதற்கு பின்னணியிலிருந்து செயல்பட்ட முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீ குமார், மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் ஆகியோரை போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இவர்களுக்கு எதிராக பதியப்பட்ட ஒன்பது பக்க முதல் தகவல் அறிக்கையில்‌, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஏற்கெனவே வேறொரு வழக்கில் தொடர்புடைய அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.மனித உரிமைகள் பாதுகாப்பாளர்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் மேரி லாலர் டீஸ்டா வெறுப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான வலுவான குரல் கொடுத்து வருபவர். மனித உரிமைகளை பாதுகாப்பது குற்றமல்ல என்று கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்த கருத்துக்கு இந்திய நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடுவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. திறம்பட வடிவமைக்கப்பட்ட நீதித்துறை கட்டமைப்பு முறைகள் படியே செடல்வாட் கைது செய்யப்பட்டுள்ளதாக  வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


Tags : UN ,Teesta Setalvad ,India ,Human Rights Commissioner , Community activist, Teesta Setalvad arrested, UN Commissioner for Human Rights, India Condemnation`
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது