×

அக்னிபாதை எதிர்ப்பு: தமிழகத்தின் பல பகுதிகளில் தென்னக ரயில்வே தொழிற்சங்கம் போராட்டம்

திருச்சி: அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தென்னக ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி பொன்மலை பனிமுனை முன்பு எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஒன்றிய அரசு அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்கி வருவது போல, ராணுவத்தையும் தனியார்மயமாக்கி வருவதாக குற்றசாட்டிய அவர்கள், இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும்; இல்லையெனில் ரயில் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

மதுரையில் எஸ்.ஆர்.எம்.யு. கோட்ட செயலாளர் ரஃபிக் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகும் இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதேபோல சேலம் ரயில்நிலையம் முன்பும் எஸ்.ஆர்.எம்.யு. மாவட்ட செயலாளர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கு மேற்பட்டோர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கும் அவர்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.           


Tags : Southern Railway Union ,Tamil Nadu , Agnipathai, Tamil Nadu, many parts, Southern Railway Union, struggle
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...