×

உக்ரைனில் பல்பொருள் அங்காடி மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதின் ஒரு பயங்கரவாதி: ஜெலன்ஸ்கி சாடல்

கீவ்: உக்ரைனின் கிரெமன்சுக் நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதின் ஒரு பயங்கரவாதி என ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது அங்காடி மீது ரஷ்யா குண்டு வீசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் பல்பொருள் அங்காடி மீது குண்டு வீசியதால் அதை பயங்கரவாத நாடக அறிவிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே மத்திய உக்ரைனில் பல்பொருள் அங்காடி மீது ரஷ்யா குண்டுவீசி தாக்கியதில் ஏராளமானோரை காணவில்லை என புகார் எழுந்துள்ளது.

2 நாட்களுக்கு முன் கிரெமன்சுக்கின் உள்ள பல்பொருள் அங்காடி மீது ஏவுகணைகளால் தாக்கியதில் 18 பேர் உயிரிழந்தனர். எனிமும் தங்கள் விமானங்கள் குண்டு வீசி தாக்கிய பல் பொருள் அங்காடி காலியாக இருந்தாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷ்ய போர் விமானம் வீசிய ஏவுகணை அங்காடி அருகே உள்ள ஆயுதக் கிடங்கையே தாக்கியதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள லிசிசான்ஸ் நகரில் நிலைமை மோசமாக உள்ளதாக பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார்.


Tags : President ,Vladimir Putin ,Ukraine , Ukraine, supermarket, missile attack, Putin, Zhelensky
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...