×

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் பிரபல தமிழ் திரைப்பட நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம்!!

சென்னை : பிரபல தமிழ் திரைப்பட நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 48. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாட்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். சென்னை கோட்டுர்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த வித்யாசாகருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.

தொற்றில் இருந்து மீண்டு வந்தாலும் பிந்தைய மருத்துவ பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்கு அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நடிகை மீனாவின் கணவர் மரணம் திரைத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பலரும் மீனாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். வித்யாசாகரின் உடல் இன்று கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Vidyasagar ,Meena , Corona, actress, Meena, husband, differently
× RELATED அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்...