பண்ருட்டியில் கொரோனாவால் தாய் உயிரிழப்பு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த ஊர்மக்கள்

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவரது தாய் சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். தாய் இறந்ததால் சங்கீதா பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் மகளுக்கு திருமணம் செய்ய தந்தை முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தில் வறுமையால் சங்கீதாவை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சங்கருக்கு சங்கீதாவை திருமணம் செய்து வைக்க சமூக ஆர்வலரும், ஆசிரியருமான செந்தமிழ்செல்வன் ஊர் மக்கள் உதவியுடன் ஏற்பாடு செய்தார். கிராமத்தில் உள்ளவர்கள் அவரவர் பங்கிற்கு செலவை ஏற்றுக்கொண்டனர். கிராமத்தினர் ஒற்றுமையுடன் ஏழை பெண் சங்கீதாவுக்கு அரசியம்மன் கோயிலில் கடந்த 22ம் தேதி திருமணம் நடத்தி வைத்தனர்.

Related Stories: