27 வருடத்துக்கு பிறகு 2ம் பாகத்தில் நடிக்கும் சுரேஷ் கோபி

சென்னை: சினிமா மற்றும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர், மலையாள நடிகர் சுரேஷ் கோபி. தற்போது அவர் நடிக்கும் 254வது படம் ‘ஹைவே-பார்ட் 2’ என்பதை அவரே சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். கடந்த 1995ல் ஜெயராஜ் இயக்கத்தில் சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான மலையாள படம், ‘ஹைவே’. பிறகு இது தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து ஜெயராஜ் இயக்கத்தில் சில படங்களில் நடித்த சுரேஷ் கோபி, அவரது இயக்கத்தில் நடித்த ‘களியாட்டம்’ என்ற படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். இந்நிலையில், கடந்த 2006ல் ‘அஸ்வரூதன்’ என்ற படத்தில் ஜெயராஜ் இயக்கத்தில் நடித்து இருந்த சுரேஷ் கோபி, 16 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார். 27 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் ‘ஹைவே-பார்ட் 2’ படத்தில் சுரேஷ் கோபி, ஜெயராஜ் இணைவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: