தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்; வங்கதேசம் ஒயிட்வாஷ்

செயின்ட் லூசியா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில் 10 விக்கெட்  வித்தியாசத்தில் அபாரமாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது. வெஸ்ட் இண்டீஸ்  சென்றுள்ள  வங்கதேம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ்  7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. அதனையடுத்து 2வது டெஸ்ட்  ஜூன் 24ம் தேதி  தொடங்கியது.  டாஸ் வென்ற வெ.இண்டீஸ் பந்துவீச,  வங்கதேசம்  முதல் இன்னிங்சில் 234 ரன் எடுத்தது.

லிட்டன் தாஸ் 53, தமீம் இக்பால் 46 ரன் எடுத்தனர். வெ.இண்டீஸ் த ரப்பில்  சீல்ஸ், ஜோசப் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய வெ.இண்டீஸ் அணி 408 ரன் குவித்தது. கைல் மேயர்ஸ் 146 ரன், கேப்டன் பிராத்வைட் 51, கேம்பெல் 45 ரன் விளாசினர். வங்கதேச வீரர்கள்  கலீத் அகமது 5, மெஹிதி ஹசன் 3 விக்கெட் எடுத்தனர். 174 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய வங்கதேசம் 186 ரன்னில் சுருண்டது. நூருல் ஹசன் ஆட்டமிழக்காமல் 60 ரன் எடுத்தார்.

வெ.இண்டீசின்  ரோச், ஜோசப், சீல்ஸ் தலா 3 விக்கெட் எடுத்தனர். எளிய இலக்குடன் களமிறங்கிய வெ.இண்டீஸ் 2.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்து அபாரமாக வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கைல் மேயர்ஸ் தட்டிச் சென்றார். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி டொமினிகா, விண்ட்சர் பார்க் மைதானத்தில் ஜூலை 2ம் தேதி நடக்கிறது.

Related Stories: