அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலுக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு? ஒன்றிய அரசு பரிசீலனை

புதுடெல்லி: ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலாக உள்ள கே.கே.வேணுகோபால்  பதவி மீண்டும் நீடிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளன. ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்கி ஓய்வு பெற்ற பிறகு, கே.கே.வேணுகோபால் (91) ஜூலை 1, 2017 அன்று அட்டர்னி ஜெனரலாக பதவியேற்றார். அட்டர்னி ஜெனரல் பதவிக்காலம் 3 ஆண்டுகள். அதன்படி, வேணுகோபாலின் பதவிக்காலம் கடந்த 2020ம் ஆண்டு முடியும் நிலையில் இருந்தபோது, தனக்கு மேலும் ஓராண்டு பதவிக்காலம் வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்தார். அதையேற்று அவருக்கு ஓராண்டு பதவிக்காலம் நீடிக்கப்பட்டது. இந்த பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், இந்த பதவியை நிரப்ப வேண்டும் என்று சட்ட அமைச்சகம் ஒன்றிய அரசுக்கு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வேணுகோபாலையே மீண்டும்  அட்டர்னி ஜெனரலாக நியமிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு  ஓரிரு நாட்களில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: