நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம்

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியாவில் தற்போது தலைதூக்கியுள்ள கொரோனா பரவல் காரணமாக ஒன்றிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் வலியுறுத்தி வருகிறது.

அதனை ஒரு பகுதியாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது, நாட்டில் வரும் மாதங்களில் பண்டிகை, திருவிழாக்கள், யாத்திரை நடைபெறவுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பெரிய திருவிழாக்களில் தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ கட்டமைப்பு வசதி, ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அங்கு கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது.  

அனைத்து மாநில அரசுகளும் வரக்கூடிய நாட்களில் பரிசோதனை, கண்காணிப்பு, தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டியமைக்க கடைப்பிடிக்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, தடுப்பூசி செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: