×

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் ஆண்டி முர்ரே, ஜோகோவிச்

லண்டன்: விம்பிள்டனில் கடந்த 2013 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே, அப்போது தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். கடந்த 2012ம் ஆண்டு யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாமிலும் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். தவிர ஆஸ்திரேலியன் ஓபனில் 5 முறை ரன்னர் கோப்பையை கைப்பற்றியுள்ளார். பிரெஞ்ச் ஓபனிலும் ஒரு முறை ரன்னர் கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

இதனிடையே முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 ஆண்டுகள் வரை டென்னிஸ் போட்டிகளில் முர்ரே பங்கேற்கவில்லை. காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து, கடந்த ஆண்டு முதல் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் ஆடி வருகிறார். நேற்று நடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் டக்வொர்த்துடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என டக்வொர்த் கைப்பற்றினார். ஆனால் அடுத்த 3 செட்களை தொடர்ச்சியாக 6-3, 6-2, 6-4 என கைப்பற்றி டக்வொர்த்தை, முர்ரே வீழ்த்தினார்.

நாளை நடைபெறவுள்ள 2வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னருடன், முர்ரே மோதுகிறார். நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் ஜான் இஸ்னர், கடுமையாக போராடி 6-7, 7-6, 4-6, 6-3, 7-5 என 5 செட்களில் பிரான்சின் என்சோ கவுகாடை வீழ்த்தி, 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றார். இத்தாலியின் முன்னணி வீரர் ஜானிக் சின்னர், நடப்பு விம்பிள்டன் சாம்பியன் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், நார்வேயின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் காஸ்பர் ரூட் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Tags : Andy Murray ,Djokovich ,Wimbledon , Wimbledon Tennis, Murray, Djokovic,
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் சாம்பியன்: 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம்