×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழை காலத்திற்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது-பவானிசாகர் வனப்பகுதியில் பதிவான புலியின் கால் தடம்

சத்தியமங்கலம் :  ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1,411 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு  பவானிசாகர், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, கரடி, செந்நாய், கழுதைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.

வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து கண்டறிவதற்காக ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் என ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி மழைக் காலத்திற்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட 10 வனச்சரகங்களில் நேற்று காலை தொடங்கியது.

300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் 76 குழுக்களாக பிரிந்து ஜிபிஎஸ் கருவி, தொலைநோக்கி, காம்பஸ் உள்ளிட்ட அதிநவீன கருவிகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி நடத்தி வருகிறார்கள். பவானிசாகர் வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணியின்போது புலியின் கால்தடம் கண்டறியப்பட்டது. நேற்று தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை 6 நாட்களுக்கு கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு பின்னர் கணக்கெடுப்பு விபரங்களை சென்னை தலைமை உயிரின வனப்பாதுகாவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Satyamangalam Tiger Reserve ,Tiger ,Bhavani Sagar forest , Satyamangalam: The Satyamangalam Tiger Reserve in Erode district covers an area of 1,411 sq km. Here Bhavanisagar, DN Palayam,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...