டோலியில் சென்று சதுரகிரியில் தரிசனம்

வத்திராயிருப்பு : சதுரகிரி கோயிலில் இரண்டாம் நாளாக பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். சிலர் டோலி கட்டி சென்று வழிபட்டனர். மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு 4 நாட்கள் தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்த நிலையில், நேற்று இரண்டாம் நாள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யச் சென்றனர். சுவாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் முடிக்காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

இதில் வயதானவர்கள், நடக்க முடியாதவர்களை டோலி கட்டி தூக்கி சென்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பொியசாமி, செயல் அலுவலர் மாரிமுத்து செய்திருந்தனர். இன்று ஆனி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் வர வாய்ப்புள்ளது.

Related Stories: