திருவள்ளூர் திமுக மத்திய மாவட்டத்தில் அமைப்பு தேர்தலுக்கு வேட்புமனு: அமைச்சர் சா.மு.நாசர் அறிக்கை

ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் திமுகவின் 15வது அமைப்பு தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட விரும்புபவர்கள் ஆவடியில் தலைமை கழக தேர்தல் ஆணையரிடம் இருந்து வேட்புமனுக்களை பெற்று கொள்ளலாம் என மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான சா.மு.நாசர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் விவரம்: திருவள்ளூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் வடக்கு, மேற்கு, கிழக்கு, பூவிருந்தவல்லி கிழக்கு, மேற்கு, எல்லாபுரம் மத்திய, வில்லிவாக்கம் ஆகிய ஒன்றியங்களில் திமுகவின் 15வது அமைப்பு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஆவடி ரயில் நிலையம் அருகே உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று (28ம் ேததி)  முதல் வேட்புமனுக்கள் வழங்கப்படுகின்றன. போட்டியிட விரும்புபவர்கள், அங்கு இன்று முதல் 2 நாட்களுக்கு தலைமை கழக தேர்தல் ஆணையர் பார்.இளங்கோவனிடம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்புமனுக்களை பெற்று கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்த வேட்பு மனுக்களை உரிய கட்டணத்துடன் மாவட்ட திமுக அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இதற்க்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Related Stories: