×

அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொளத்தூர் தொகுதியில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வட மாநிலங்களில் துவங்கிய இந்த ஆர்ப்பாட்டம் தற்போது தமிழகத்திலும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன்படி வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபுவின் அறிவுறுத்தல்படி நேற்று காலை கொளத்தூர், திருவிக நகர், பெரம்பூர் ஆகிய 3 தொகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் இபி அலுவலக நுழைவாயிலில் மாநில செயலாளர் முனீஸ்வர கணேசன் முன்னிலையில் சர்க்கிள் தலைவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டாளம் சந்திப்பு அருகே மாநில செயலாளர் குணசேகரன் முன்னிலையில் சர்க்கிள் தலைவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் காமராஜர் சிலை அருகே மாநில செயலாளர் அகரம் கோபி முன்னிலையில் சர்க்கிள் தலைவர்கள் ஆனந்த ராம், ஹரிபாபு, முரளி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்தார். இதில் இந்திய இளைஞர்களின் ராணுவ கனவுகளை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசை கண்டிப்பதாகவும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் இந்திய ராணுவத்தையும் பலவீனப்படுத்தும் ஒன்றிய பாஜ மோடி அரசின் அக்னிபாதை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

Tags : Congress , Congress protests against the fire project
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...