சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஓஎஸ்ஆர் நிலங்களில் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 ஆயிரம் சதுர மீட்டரிலிருந்து 10 ஆயிரம் சதுர மீட்டர் வரை கட்டிட பணிகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு கட்டுமான நிறுவனமும் திறந்த வெளிக்காக மாநகராட்சிக்காக குறிப்பிட்ட அளவில் நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதாவது கட்டிடத்தின் மொத்தப் பரப்பில் 10 சதவீத நிலத்தை இதற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த நிலத்தை சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் மூலமாக (சிம்டிஏ) சென்னை மாநகராட்சிக்கு அளிக்க வேண்டும். இந்த இடங்கள் வாகனங்கள் நிறுத்தம் இடமாகவும், சிறிய மைதானம், பூங்காக்கள் போன்றவை அமைக்கவும் பயன்படுத்தப்படும்.

இந்நிலையில், ஒரு சில ஒஎஸ்ஆர் இடங்களில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடத்தை ஆக்கிரமித்து தங்களின் சொந்த பயன்பாட்டிற்கு உபயோகித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, `சென்னை மாநகராட்சி 172வது வட்டம் 13வது மண்டலத்தில் பிரபல மாலானது சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பொது பயன்பாட்டிற்கான பூங்காவினை சட்டத்திற்கு புறம்பான வகையில் சாலையாக பயன்படுத்தி வருகிறது. எனவே விதிமீறும் தனியார் நிறுவனங்களின் மீது சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: