ஓபிஎஸ்சை ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: டிடிவி.தினகரன் பேட்டி

சென்னை: திருவள்ளூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் கூட்டம், ஆவடி அருகே அயப்பாக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு கட்சி பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்  நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் வரலாற்றில் மிகப்பெரிய களங்கம். அதிமுக அயோக்கியர்களின் கூடாரமாக மாறிவிட்டது. வருங்காலத்தில் ஜெயலலிதாவின் கொள்கையை முன்னிறுத்தி ஆட்சி அமைத்து, அதன்பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம். தற்போது அதிமுகவின் இரட்டை இலை சின்னம் நயவஞ்சக வில்லன்களின் கையில் சிக்கியுள்ளது. அதை அமமுக தொண்டர்கள் மீட்பர். எனக்கு ஓ.பி.எஸ். ரகசியமாக சந்திக்க எவ்வித அவசியமும் இல்லை. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை பலகோடி கொடுத்து விலைக்கு வாங்கி, எடப்பாடி பொது செயலாளராக நினைக்கிறார். அதனால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Related Stories: